Date:

போட்டி நிறுவனங்களால் பின் தள்ளப்பட்ட பேஸ்புக்

உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை 18 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கூறியதாவது:- பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை கடந்த 3  மாதங்களில் 193 கோடியில் இருந்து 192.9 கோடியாக குறைந்துள்ளது.

இதற்கு டிக்டொக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுடனான போட்டியே காரணம். மேலும் விளம்பரதாரர்களும் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதற்காக செலவிடும் தொகையை குறைத்துள்ளனர்.

நியூயோர்க் பங்குச்சந்தையில் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மெட்டா மட்டுமில்லாமல் ட்விட்டர், ஸ்னாப்சேட், பின்ட்ரஸ்ட் போன்ற சமூக வலைதளங்களின் பங்கு மதிப்பும் குறைந்துள்ளது. இளைய தலைமுறையை சேர்ந்த பயனர்கள் தமது போட்டியாளர்களின்  தளங்களை பயன்படுத்துவதை அதிகரித்துள்ளமையே காரணமாகும்.

மேலும் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐஓஎஸ்சில் அமுல்படுத்தியுள்ள தனிநபர் உரிமைகளின் மாற்றம், விளம்பர நிறுவனங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ள பயன்பாட்டாளர்களை அளவிடுவதை கடினமாக்கியுள்ளது.

இதுவே 1000 கோடி டொலர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மார்க் ஸக்கர்பெர்க் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருவதால் மெட்டா நிறுவனம் பிற சமூக வலைதளங்களுடனான போட்டியை குறைத்துள்ளது.

மேலும் டிக்டொக் நிறுவனம் இதுவரை இல்லாத அளவில் அதிவேகமாக வளர்ந்து வருவதும் பேஸ்புக்கின் பயனர்கள் குறைவதற்கு ஒரு காரணம் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இளம் காதலி பரிதாபம் ;கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில்…

கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில் 9விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கோஹிலவத்தை...

துப்பாக்கிகளை கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ரஜரட்ட பல்கலை பேராசிரியர்களின் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற...

நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான...