நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் நிலையங்களின் செயலிழப்பு காரணமாக மின் உற்பத்தி குறைவடைந்தமையினால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாமென இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இன்றைய தினம் மின்வெட்டுக்கான அனுமதியை இலங்கை மின்சார சபை கோரவில்லையென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ அல்லது மின்சார விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டாலோ மின்சார சட்ட விதிகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.