இன்றைய தினம் நாட்டில் மின் வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கான அனுமதியை மின்சார சபை கோரவில்லை என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஜனக ரத்னாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மின் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டால் மின்சார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.