Date:

இந்த மாதம் பிரச்சாரக் கூட்டத்தை நடாத்தும் திட்டம் – நிதி அமைச்சர்

இந்த மாதம் 9ம் திகதி அனுராதபுரம் நகரில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடாத்தும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நேரத்திலும் தேர்தல்களை எதிர்நோக்க தாமும், தமது கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் தயார் என தெரிவித்துள்ளார்.

“விரைவில் தேர்தல் ஒன்றை நடாத்துவதே கட்சியின் நோக்கமாகும்.அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத் தேர்தலை வெகு விரைவில் நடாத்த முடியாது” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களையே விரைவில் நடாத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன முன்னணியின் மகளிர் அணிகளை வலுப்படுத்தும் திட்டங்கள் எதிர்வரும் வார இறுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...