அரசாங்கத்துடன் இருந்துகொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மற்றும் அதன் தலைவரான மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அரசாங்கத்தை வெளிப்படையாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்த இன்னும் இரண்டரை வருட காலம் மீதமுள்ளது. இப்படியான சூழ்நிலையில், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் தயாராகி வருகின்றன.
நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்தும் தற்கவைக்கும் தந்திரமாக அரசாங்கம் அரசியலமைப்பு முடிச்சை போட தயாராகி வருகிறது. இந்த விடயங்கள் காரணமாகவே அடுத்த தேர்தல் பொதுத் தேர்தலாக இருக்கலாம் என தான் நம்புவதாகவும்” மைத்திரிபால சிறிசேன குறிப்பிடடுள்ளார்.
அரசியலில் நீண்டகால நண்பர்களும் இல்லை நீண்டகால எதிரிகளும் இல்லை எனவும் மேலும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கத்தில் இவர்கள் அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்து வருவதாக பேசப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், நாட்டில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படுமாயின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசியல் கூட்டணி தனித்து அந்த தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.