நுவரெலியா மாவட்டத்திற்கு சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டிய ஐந்து பிரதேச செயலகங்களை புறக்கணித்து 2 உப பிரதேச செயலகங்கள் மாத்திரம் வழங்கப்பட்ட விடயம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டை முன்வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், நுவரெலியா மாவட்டத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக்கேட்க வேண்டிய தரப்பினர் மௌனம் காப்பதாக குற்றம் சுமத்தினார்.