எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியா வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான இரண்டு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கை இன்று (02) மாலை கைச்சாத்தானது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில்திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவும், இந்திய தரப்பில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் (EXIM) தலைமை பொது முகாமையாளர் கௌரவ் பண்டாரியும் கையெழுத்திட்டனர்.