இலங்கையில் பணவீக்க அதிகரிப்புக்கு அத்தியாவசிய பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்புக்களே காரணம் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2021 டிசம்பரில் 12.1 சதவீதமாக இருந்த பணவீக்கம் 2022 ஜனவரியில் 14.2ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் 2021 டிசம்பரில் 6 சதவீதத்தில் இருந்து 2022இல் 6.9வீதமாக உயர்ந்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் இந்த அறிக்கை தொடர்பாக “அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கான காரணங்களை” கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் விளக்கினார்.
நாட்டில் உற்பத்தி குறைகின்றபோது, பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்படும்.அந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வற்காக தேவையான பொருட்கள் இறக்குமதி செய்யப்படவேண்டும்.
எனினும் இறக்குமதிக்கான டொலர் இல்லாதபோது உணவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என்றும் உற்பத்திக்கு மேலதிகமாக பணத்தை அச்சிடும் போதும் அது பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.