கம்பஹாவில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் சீனாவினால் விலைக்கு வாங்கப்பட்ட ஆட்சியாளர்களே இன்று நாட்டை ஆட்சி செய்கின்றார்கள் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைவர், ஆட்சியாளர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டால் அவர்கள் திருடர்கள் என்றால் அந்த நாட்டுக்கு எதிர்காலமில்லை. இந்த தலைவர்கள் விலைக்கு வாங்கப்பட்டவர்கள். நாம் நாடாளுமன்றில் காசோலை இலக்கங்களுடன் இந்த விடயத்தை அம்பலப்படுத்தியிருந்தோம் எனவும் இதன்போது கூறியுள்ளார்.