மலையக நீர்த்தேக்கங்களுக்கு சமீபமாக நீரேந்தும் பிரதேசங்களிலுள்ள காட்டுப்பகுதிகளுக்கு இனந்தெரியாத சக்திகளால் தொடர்ச்சியாக தீ வைத்து வரும் நிலையில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அண்மித்த காட்டுப் பகுதி தீக்கிரையாகியுள்ளது.
குறித்த பகுதிக்கு தீ வைத்ததன் காரணமாக அப்பகுதியில் உள்ள நீர் ஊற்றுக்கள் அற்றுப்போவதுடன் சிறிய வகை உயிரினங்கள் மற்றும் அப் பிரதேசத்திற்கே உரித்தான அரிய வகை தாவரங்கள் ஆகியன அழிவடையும் நிலையினை எதிர்நோக்கியுள்ளன.
வறட்சியான காலநிலையினையடுத்து பல பிரதேசங்களில் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக வனப்பகுதிகளுக்கு தீ வைப்பதனால் இந்நிலை மேலும் அதிகரித்து நீரின்றி பல்வேறு பிரச்சினைக்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் எனவும் நீர் போசனை பிரதேசங்களில் உள்ள காட்டுப்பகுதிக்கு தீ வைப்பதனால் தேசிய மின் உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் அப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்து வனப்பகுதிகளை தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சூழல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.