“நிலவும் நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் நெருக்கடி இருக்கின்றது என்பதை முதல் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் நீள, அகலத்தை ஆராய வேண்டும். அதன் பின்னர் அதற்கான தீர்வை தேட வேண்டும்.”என்றும்
“முன்வைக்கப்படும் தீர்வை நடைமுறைப்படுத்தும் வரை அரசாங்கம் அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும். அரசாங்கம் அவ்வாறு முன்வைக்கும் தீர்வுக்கு அர்ப்பணிப்பை செய்யும் அதேவேளை அரசியல்வாதிகள் தமது அர்ப்பணிப்பை செயலில் காட்ட வேண்டும்.”என்றும்
“அடுத்த மாத காலத்திற்குள் இந்த செயற்பாடு நடக்க வேண்டும். இந்த யோசனையை அரசாங்கம் முன்வைத்து அது ஒரு மாதத்தில் நடக்கவில்லை என்றால், தான் உட்பட 10 கட்சிகள் இணைந்து முன்வைக்கும் தீர்வை மக்கள் மயப்படுத்த போவதாக” எரிசக்தி அமைச்சரும் பிவித்ருஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.






