நாளை முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைகள் காரணமாகவே இவ்விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு உபயோகிக்க வேண்டிய மாற்று வீதி ஒழுங்குகான வரைபடங்களும் வெளியிடப்பட்டுள்ளன.








