ஹட்டன்-டிக்கோயா சலங்கந்தை பிரதான வீதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி இன்று காலை 6.45 மணியளவில் விபத்துக்குள்ளாகியது.
இதில், ஒருவர் உயிரிழந்ததோடு 16 பேர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பஸ்ஸில் 17 தொழிலாளர்கள் பயணித்துள்ளதுடன் சாரதி உட்பட 16 பெண் தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதுடன் ஆண் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
சம்பவத்தில் போடைஸ் பகுதி சேர்ந்த மரியசவரி என்ற 62 வயதுடைய ஆண் தொழிலாளி ஒருவர் உயிர்ழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.