Date:

4G நெட்வொர்க்கை முற்றிலும் இலவசமாக அனுபவிக்குமாறு தமது பாவனையாளர்களை அழைக்கிறது எயார்டெல்

எயார்டெல் லங்கா அதன் சமீபத்திய மேம்படுத்தப்பட்ட வேகமான மற்றும் மிகவும் பிரபல்யமான 4G கவரேஜ் நெட்வொர்க்குடன் இந்த ஆண்டு பண்டிகை கால கொண்டாட்டங்களை மேலும் மேம்படுத்தியுள்ளது. இதுவரை Airtel உடன் இணைந்துகொள்ளாத பாவனையாளர்கள் இந்த 4G நெட்வொர்க் அனுபவத்தை முதல் முறையாக இலவசமாக அனுபவிக்க அழைக்கப்படுகிறார்கள்.

“இந்தப் புத்தாண்டில் 4G நெட்வொர்க் மூலம் அனைவருக்கும் பரந்த அளவிலான வாய்ப்புகளுக்கான கதவைத் திறக்க விரும்புவதே எங்கள் விரும்பம். இந்த புத்தாண்டில் தடையில்லா நெட்வொர்க் அனுபவம் உங்களை அணுகுவது அனைவருக்கும் ஒரு ஆசீர்வாதம்! எயார்டெல்லின் புதிய 4G நெட்வொர்க்கை அனுபவிக்க உங்களை அழைக்கிறோம், உங்களுக்கு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என எயார்டெல் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஆஷிஷ் சந்திரா தெரிவித்தார்.

இந்த வாய்ப்பு தகுதிவாய்ந்த பாவனையாளர்களுக்கும், இதற்கு முன்பு எயார்டெல் இணைப்பு வைத்திருந்தவர்களுக்கும் – எயார்டெல்லின் மதிப்பு அடிப்படையிலான 4G நெட்வொர்க் மற்றும் Freedom Packs தொடர்பான முதல் அனுபவத்தை வழங்கும். அவர்கள் தங்களுடைய பழைய எயார்டெல் சிம் கார்டை மொபைல் போனில் பயன்படுத்தி, 123 ஐ Dial செய்வதன் மூலம் ஏழு நாட்கள் வரை இலவச அழைப்புகள் மற்றும் 4G டேட்டா உள்ளிட்ட கவர்ச்சிகரமான சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். எயார்டெல் லங்கா அதன் புத்தாக்கமான 4G நெட்வொர்க் மற்றும் Freedom Packsகளின் உத்தரவாதமான செயல்திறனை உங்களுக்கு வழங்குகிறது, பாரம்பரிய ரீலோட்களுடன் ஒப்பிடும்போது நான்கு மடங்கு வேகமான இணைய அனுபவம், 50% வரை சிறந்த உள்ளக கவரேஜ் மற்றும் 80% வரை சேமிப்புடன் சிறந்த பாவனை அனுபவத்தை உறுதி செய்கிறது. எயார்டெல்லின் மேம்படுத்தப்பட்ட 4G நெட்வொர்க் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குவதற்கான பரந்த அளவிலான கவரேஜ் மற்றும் திறன்களை வழங்குகிறது.

கடந்த வருடத்தில், Airtel Lanka வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும், எளிதில் அணுகக்கூடிய மொபைல் இணைய அனுபவத்தை வழங்குவதற்கும் அதன் முயற்சிகளை விரைவுபடுத்துவதற்காக நாடு முழுவதும் அதன் 4G வலையமைப்பைப் புதுப்பித்து பலப்படுத்தி வருகிறது. தற்போது, எயார்டெல்லின் 4G நெட்வொர்க் மற்றும் மதிப்பு அடிப்படையிலான Freedom Packsகள் அனைத்து மட்டங்களிலும் பாவனையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ளன. ஒவ்வொரு இலங்கையர்களும் சிறந்த நெட்வொர்க் அனுபவத்தை மலிவு விலையில் பெற வேண்டும் என்று நிறுவனம் நம்புகிறது மற்றும் Airtel Lanka தொடர்ந்து வளர்ந்து வரும் அதன் பாவனையாளர் தளத்தின் அபிலாஷைகளை நிலைநிறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல்...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...