வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே. டி. ஆர். ஒல்காவும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் நிறுவனத்தின் புதிய திட்டங்கள் மற்றும் அதன் கடமை, பொறுப்புகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
புதிய நிறுவனத்தின் தலைவர் பதவியை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க வகிப்பதுடன், சட்டத்தரணி பூபதி கஹதுடுவ, பொறியியலாளர் தம்மிக்க மல்லிகாராச்சி ஆகியோர் அந்நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மனோஜ் குப்தா, அசீம் பார்கவா மற்றும் ராஜேஷ் பகத் ஆகியோர் புதிய நிறுவனத்தின் பணிப்பாளர்களாக லங்கா இந்தியன் ஒயில் (லங்கா ஐஓசி) நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ட்ரிங்கோ பெற்றோலியம் டெர்மினல்ஸ் நிறுவனமானது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 51% பங்குகள் உரித்துடைய, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்படும் துணை நிறுவனமாக செயற்படுகிறது.
