சுற்றிவளைப்புகளை மேற்கொண்டாலும், சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு சீமெந்தை தொடர்ந்தும் விற்பனை செய்வதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பெரும்பாலான பகுதிகளில், சீமெந்து மூடையின் விலை 1,600 முதல் 1,800 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நுகர்வோரிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் காரணமாக, நுகர்வோர் அதிகார சபை, கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பாகங்களில், அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
அதேநேரம், அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்கும், சீமெந்து தட்டுப்பாட்டுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நேற்றைய தினம், சீமெந்து இறக்குமதியாளர்களின் பங்கேற்புடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர்.