களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு அவசியமான மேலும் 9,000 மெற்றிக் டன் எண்ணெய், கனியவள கூட்டுத்தாபனத்தினால் இன்றைய தினத்திற்குள் வழங்கப்படவுள்ளது.
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில், தற்போது 2,000 மெற்றிக் டன் எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக அந்த மின்னுற்பத்தி நிலையத்தின் பொறியியலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மேலும் 9,000 மெற்றிக் டன் எண்ணெய் கிடைப்பதன் மூலம், எதிர்வரும் 8 அல்லது 9 நாட்களுக்கு, மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.