மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரிகள் ஆகியோர் 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
இதற்கான தீர்வை வழங்கும் நோக்கில் பதவி உயர்வில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சரினால் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டதாகவும் அத்தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் குறித்த அமைச்சரவை அனுமதியில் காணப்பட்ட பிரச்சினை காரணமாக 13,000 தாதியர்களுக்கான பதவி உயர்வு இல்லாமல் போயுள்ளதாகவும் சுகாதார துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டப வளாகப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.