Date:

இலங்கை கிரிக்கட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தீர்மானம்

ஐந்து போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் குழு அறிவித்துள்ளது.

இந்த குழுவில், போட்டித்தடைக்கு உள்ளாகியுள்ள தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.20 பேரைக் கொண்ட இந்த குழு, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் அனுமதியை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இப்போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி சிட்னி, மெல்பர்ன் மற்றும் மனுகா ஓவல் மைதானங்களில் நடைபெறவுள்ளன.

அதேவேளை, இந்த தொடரில் பங்கேற்கவுள்ள அவுஸ்திரேலிய அணி, அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிச்செல் மார்ஷ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்க  தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...

ஈரானில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா...