Date:

கோழி இறைச்சி – முட்டை விலைகளில் வீழ்ச்சி!

அண்மைய காலங்களில் சந்தையில் அதிகரித்திருந்த கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

27 ரூபா வரையில் அதிகரித்திருந்த முட்டை விலை, தற்போது 21 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக, கால்நடை வளங்கள், பண்ணை மேம்பாட்டு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் தொடர்பான பிரச்சினை கால்நடை பராமரிப்பிற்கும் தாக்கம் செலுத்துவதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது போன்ற நிலைமைகளில், மின்பிறப்பாக்கியைப் பயன்படுத்தி, குறித்த செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதேநேரம், இலங்கையில் முட்டை உற்பத்தியை அதிகரிக்க, தீர்வை வரியின்றி விலங்கு உணவை இறக்குமதி செய்ய நிதி அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கமைய, தீர்வை வரியற்ற விலங்குணவுகள் கொண்டுவரப்பட்டு, பண்ணைகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன.

எனவே, உற்பத்தியாளர்கள், இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகளை தாமாகவே குறைத்துள்ளனர் என இராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...