Date:

டயகம லயன்குடியிருப்பில் உள்ள வீடொன்றில் திடீர் தீப்பரவல்!

டயகம காவல்துறை பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் 14 வீடுகளை கொண்ட தொடர் லயன்குடியிருப்பிலுள்ள வீடொன்றில் இன்று(24) காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலினால் குறித்த வீட்டிலிருந்த வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள் என பெருமளவிலான பொருட்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் வீட்டிலிருந்த ஐவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீ ஏற்பட்டபோது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதேவேளை இது தொடர்பாக டயகம காவல் நிலையத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருவதோடு, தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...