நீர்கொழும்பு சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (06) பாராளுமன்றத்தில் இத்தகவலைத் தெரிவித்தார்.

கடந்த மாதம் 05ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 22 கைதிகளும் 10 அதிகாரிகளும் உயிரிழந்ததாக அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

அத்துடன், இச்சம்பவத்தில் 21 அதிகாரிகளும் 106 கைதிகளும் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அரச நிர்வாகச் சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்டு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய, இழப்பீடு வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் அதிகாரிகள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பிலும் அக்குழுவின் மூலம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

மேலும், மோதலில் காயமடைந்த அதிகாரிகளின் நிலைமை மற்றும் பூரண ஊனமுற்ற நிலைமை தொடர்பில் ஆராய்ந்து, அதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதும் இக்குழுவின் மூலம் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாக அறிவிப்பு!

2019 உயிரத்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட...

அநுராதபுரத்தின் சில பகுதிகளுக்கு நாளை 8 மணி நேர நீர் வெட்டு!

கலா வாவி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (23) 08 மணித்தியாலங்களுக்குத் தற்காலிகமாக நீர் விநியோகம்...