Date:

நாடு மிகவும் உக்கிரமான பொருளாதார நெருக்கடியில்-மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர்

இலங்கை தற்போது பிச்சைக்காரனின் நிலைமைக்கு சென்றுள்ளதாகவும் இந்த நிலைமையை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டப்ளியூ.ஏ. விஜேவர்தன  தெரிவித்துள்ளார்.

நாடு மிகவும் உக்கிரமான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்காலத்தில் இலங்கையானது லெபனான், துருக்கி போன்ற நாடுகளின் நிலைமைக்கு செல்லும்.

உண்மையில் எதிர்காலத்தில் நாம் பிச்சைக்காரனின் நிலைமைக்கு செல்வோம். பிச்சைக்காரனுக்கு சூடான சோற்றை பெற முடியாது. இந்த விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்த 12 மாதங்களுக்கு மக்கள் குறிப்பாக ஜனாதிபதி உட்பட கீழ் மட்டத்தில் இருக்கும் அனைவரும் சிரமமான அர்ப்பணிப்புகளை செய்ய தயாராக இருக்க வேண்டும்.

அப்படி செய்யவில்லை என்றால், உக்கிரமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என்பதுடன் இலங்கையானது துருக்கி, லெபனான் நிலைமைக்கு செல்லும்.

இதனால், பொது மக்கள் இந்த நிலைமையை புரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம். அதேபோல் மத்திய வங்கி போன்ற நிறுவனங்கள் அழகான வார்த்தைகளால், நிலைமையை கட்டியெழுப்பும் விடயங்களை கூறாது, நாட்டின் உண்மையான நிலைமையை மக்களுக்கு கூற வேண்டும்.

மக்களின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில் நாடு உக்கிரமான பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்றது. 1971 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இப்படியான நிலைமை காணப்பட்டது.

அப்போது நாட்டின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தேசிய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாம் எரிமலைக்கு மேல இருக்கின்றோம். அது எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம். இதனால், அனைவரும் ஒன்றிணைந்து, எரிமலை வெடிப்பதை தடுக்க வேண்டும் என சிறிமாவோ பண்டாரநாயக்க கூறினார்.

இதனால், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் மிக தெளிவாக நாட்டுக்கு கூற வேண்டும் எனவும் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

சஷீந்திரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி...

சி.ஐ.டியில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அறிவிப்பு

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும்...