Date:

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 3 நாட்களில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக வருமானம்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையான பகுதி (அத்துகல்புர நுழைவு) திறக்கப்பட்டு மூன்று நாட்களில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் சுமார் 50,000 வாகனங்கள் குறித்த பகுதி ஊடாக பயணித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதி திறக்கப்பட்ட நாள் முதல் மறுநாள் பிற்பகல் 12 மணி வரை வாகனங்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், அதற்கு பின்னரான காலப்பகுதியில் இவ்வாறு பணம் அறவிடப்பட்டது.

கடந்த சனிக்கிழமை (15) மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான பகுதி திறந்து வைக்கப்பட்டதையடுத்து, முதல் 12 மணித்தியாலங்களுக்குள் இலவசமாக பயணிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின்னர் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்த  நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (16) நள்ளிரவு முதல் திங்கட்கிழமை (17) நள்ளிரவு வரை 23,039 வாகனங்கள் பயணித்துள்ளன.

இந்த மூன்று நாட்களில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் 17ஆம் திகதியன்றே பயணித்துள்ளன.

அன்றைய தினம் 48 இலட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையிலான பகுதியில் மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருணாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் இடைமாறல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...

போரை முடிவுறுத்த 15 யோசனைகள் அடங்கிய ஆவணம் ஈரானுக்கு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம்...

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக்...