Date:

மின்தடை ஏற்படுமா? – கலந்துரையாடல் இன்று

மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (19) இடம்பெறவுள்ளது.

மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான டீசல் பற்றாக்குறை காரணமாக அந்த மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பிரிவின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.

இதன் காரணமாக மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு மின்சார துண்டிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் பாதிப்பு காரணமாகத் தேசிய மின் கட்டமைப்பில் 165 மெகாவோட் மின்சாரத்திற்கான பற்றாக்குறை நிலவுகின்றது.

எரிபொருள் இன்மையால் சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று (18) மதியம் தடைப்பட்டன.

எவ்வாறாயினும் 900 மெற்றிக் டன் உலை எண்ணெய் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்று இரவு 10 மணிக்குள் சப்புகஸ்கந்த டீசல் மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்படையக்கூடும் என மின்சார பொறியியலாளர் தெரிவிக்கின்றனர்.

குறித்த மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான டீசல் இன்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, சப்புகஸ்கந்த டீசல் மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்படையுமாயின் தேசிய மின் கட்டமைப்பில் மேலும் 150 மொகாவோட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படும்.

அவ்வாறாயின் சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கும் அதிக காலம் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து நிர்ணயித்த வெற்றி இலக்கு

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம்...

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர் இன்று இலங்கை இந்தியாவில் ஆரம்பம்..!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று...

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள்…

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான...