Date:

எரிவாயு சிலிண்டர்களுக்காக மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை- லிட்ரோ நிறுவனம்

நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான எரிவாயு சிலிண்டர்கள் உள்ளன. இதன் காரணமாக மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை.சிறிய அளவிலான வர்த்தக நிலையங்களுக்கும் அடுத்த வாரத்தில் இருந்து தட்டுப்பாடின்றி எரிவாயு விநியோகிக்கப்படும் என்று லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த காலங்களில் நாளாந்த எரிவாயு சிலிண்டர்களுக்கான கேள்வி சுமார் இரண்டு லட்சமாகக் காணப்பட்டது.

 

எனினும், தற்போது அந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக காணப்படுகின்றது. இதன்படி, நிறுவனம் தற்போது நாளாந்தம் 90 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கின்றது.எனினும், இரண்டரைக் கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டர்களைப் பகிர்ந்தளிப்பதில் சிறு தாமதம் நிலவுதாகவும் லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது

விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின்...

இரட்டை கொலைத் தொடர்பில் 6 பேருக்கு மரண தண்டனை

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண...

Breaking தலாவா பஸ் விபத்தில் உயர்தர மாணவன் உயிரிழப்பு

தலாவ ஜெயகங்கா பகுதியில் திங்கட்கிழமை (10) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் உயர்தர...

இலங்கை சவூதி அரேபியாவுடன் ஹஜ் உடன்படிக்கை

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக இலங்கை சவூதி அரேபியாவுடன் ஹஜ்...