நேற்று மத்திய அதி வேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் திறந்து வைக்கப்பட்டது.இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 3 வருடங்களுக்குள் 5 வருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்த சகல விடயங்களையும் நிறைவேற்றுவதாகவும் இதற்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பும் தேவை.மக்களுக்காகவே பணியாற்றுவதற்கே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.
அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்கும் போது விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும் நாட்டின் அபிவிருத்திக்கு முறையான போக்குவரத்துக் கட்டமைப்பு அவசியமாகும். இதன்படி அதிவேக நெடுஞ்சாலைகளையும் கிராமிய வீதிகளையும் தற்போதைய அரசாங்கம் அபிவிருத்தி செய்வதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இந்த நிகழ்வின் போது தெரிவித்தார்.