அமெரிக்காவில் ஓமைக்ரொன் திரிபு வேகமாகப் பரவி வரும் நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்படும் கொவிட் பரிசோதனைகளை இரட்டிப்பாக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய, பாடசாலைகளில் 10 மில்லியனுக்கும் அதிகமான கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் நேற்று 700,000 க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் 98.3 சதவீதம் பேர் ஒமைக்ரொன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.