தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதனிடையே மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பிரபல நட்சத்திரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக பதிவிட்டு உள்ளார்.
லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், தற்போது தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.