Date:

இந்தியாவும் சீனாவும் எமது நாட்டிற்கு தேவையான உதவிகளை வழங்க முன் வந்தார்களே தவிர ஒப்பந்தங்களின் பின்னணியில் வேறு எந்த காரணியும் இல்லை-ரமேஷ் பத்திரண

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், சீன வெளியுறவுகள் அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இவற்றில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தமும் உள்ளடங்குகிறது.

 

இது கடந்த அரசாங்கத்தினால் இந்தியாவுடன் செய்து கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த ‘எட்கா’ ஒப்பந்தத்தை ஒத்ததா? என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் கேட்கப்பட்ட போது, இந்தியாவும் சீனாவும் எமது நாட்டிற்கு தேவையான உதவிகளை வழங்க முன் வந்தார்களே தவிர இவ்விரு நாடுகளுடனான ஒப்பந்தங்களின் பின்னணியில் வேறு எந்த காரணியும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

 

உலகில் எந்த நாடும் எமக்கும் எதிரிகள் அல்ல. அனைத்துமே எமது நட்பு நாடுகளாகும். சீனாவுடனும் இந்தியாவுடனும் சில ஒப்பந்தங்களை மேற்கொள்ள இணக்கப்பாட்டினை எட்டியுள்ளோம்.

 

இந்தியாவும் அண்மையில் 1 பில்லியன் வேலைத்திட்டத்திற்கு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது. இதே போன்று தான் சீனாவும் பணப்பறிமாற்றலுக்காக இணக்கம் தெரிவித்துள்ளது. எனவும் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...