Date:

பொதுஜன பெரமுனவின் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இந்தவாரம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இந்த வாரம் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் கட்சி என்ற ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தொடர்பான இறுதி தீர்மானத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

கட்சி என்ற ரீதியில் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி தீர்மானத்தை அதன் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்வாரென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றிரவு(10) இடம்பெற்றுள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திடீரென நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி! எதிர்க்கட்சி அதிரடியாக வெளிநடப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்றையதினம் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.   நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி...

கற்பிட்டி பிரதேச சபை தலைவர் மீது தாக்குதல்

மதுரங்குளிய விருதோடை பகுதியில் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் மற்றும் ஒரு...

யாழில் எரிபொருள் தட்டுப்பாடு ; வெளியான அவசர அறிவித்தல்

யாழ். மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ்....

உடனடியாக தெஹ்ரான் மக்களை வெளியேறுமாறு டிரம்ப் உத்தரவு

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அனைத்து குடிமக்களையும் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க...