உரிய தர உறுதிப்படுத்தலுடன் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு கப்பல்களில் ஒரு கப்பலின் எரிவாயுவை தரையிறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அடுத்த வாரம் லாஃப்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது.
மற்றைய கப்பலின் தர அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என நுகர்வோர் நடவடிக்கைகள் தொடர்பான அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் அறிவித்துள்ளார்.
இதேவேளை, சமையல் எரிவாயு கொள்கலன்களைக் கொள்வனவு செய்வதற்காக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும் நீண்ட வரிசையில் காத்திருப்போரில் சிலர், கொள்வனவு செய்யப்படும் சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றமையும் அறியப்பட்டுள்ளது.