Date:

பேருந்து – டிப்பர் விபத்து: 26 பேர் காயம்

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி பட்டித்திடல் பகுதியில் லொறி மற்றும் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 26 பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று (10) காலை இடம்பெற்றுள்ளது.அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான பஸ்ஸும் மூதூரிலிருந்து சேறுவில நோக்கி பயணித்துகொண்டிருந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இதில் அதிகளவில் அரச உத்தியோகத்தர்கள் வருகை தந்ததாகவும் இதுவரைக்கும் 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

டிப்பர் வாகனத்தின் சாரதியின் கால்கள் உடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்றாவது தடவையாகவும் செம்பியனாகி இந்தியா சாதனை!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக...

இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று...

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...