வவுனியா மறவன்குளம் பாரதிசன் கல்லூரிக்கு டிஜிட்டல் கணனி திரை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவது தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்காக உருவாக்கப்பட்ட தந்திரம் எனத் தெரிவித்துள்ளார். இதன்போது மாற்று அரசியல் கட்சிகள் எனப்படும் சில கட்சிகளை நாட்டின் அபிவிருத்தியில் இணையுமாறும் சவால் விடுத்தார்.
வவுனியா மறவன்குளம் பரடிசன் கல்லூரிக்கு 750,000 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையளித்தமை குறிப்பிடத்தக்கது.