வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது தடுப்பூசிகளை பெற்றிருக்காவிட்டால் அவர்களுக்கு தடுப்பூசி வழங்க இலங்கை விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
அவ்வாறு தடுப்பூசி பெறாதவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த சேவை 24 மணிநேரமும் மேற்கொள்ளப்படுமெனவும் விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்காக விமான நிலையத்தில் கொவிட்-19 தடுப்பூசி மையமொன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.