Date:

ஒமைக்ரொன் வைரஸ் திரிபின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் – WHO எச்சரிக்கை

ஒமைக்ரொன் கொவிட் வைரஸ் திரிபின் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வைரஸ் திரிபினால் உலகளாவிய ரீதியில் மரணங்கள் ஏற்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

முன்னைய திரிபுகளை விடவும், ஒமைக்ரொன் திரிபானது மக்களை கடுமையாக நோய்வாய்க்குட்படுத்தும் தன்மை குறைவானது என அண்மைய ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒமைக்ரொன் தொற்றுறுதியாகும் நபர்களின் எண்ணிக்கையானது, சுகாதாரக் கட்டமைப்புக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை, அமெரிக்காவில் 10 இலட்சத்துக்கும் அதிகமான கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் கடந்த வாரம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 71 சதவீதத்தினாலும், அமெரிக்காவில் 100 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சுகாதார முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் உலகெங்கிலும் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கையில் 90 சதவீதமானோர் தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என...

எரிபொருள் விலைகளில் திருத்தம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, இன்று (31) நள்ளிரவு 12.00...

அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான...

STC முன்னாள் தலைவர் கைது

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட்...