இலங்கையில் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்ற எரிவாயு தொடர்புடைய வெடிப்பு சம்பவங்களால் 3 பேர்வரையில் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறான நட்டயீட்டை லிட்ரோ நிறுவனம் வழங்கவுள்ளது? என்பது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போது, எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க கூறியுள்ளார் .
பாதிக்கப்பட்டவர்கள் 1311 என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் இந்த காப்புறதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து லிட்ரோ எரிவாயு பாவனையாளர்களுக்கும் 1 மில்லியன் ரூபாய் வரையான காப்புறுதியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.