இன்று வெளியிடப்படவுள்ள சுற்றறிக்கையில் அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிக்க தீர்மானித்துள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி அறிவித்துள்ளார்.
இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டதை அடுத்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.