சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதியை விமர்சித்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.