2022ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சம்பள அதிகரிப்பை பெற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நேற்றிரவு (03) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2022 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த ஆண்டு முதல் அதிபர்கள் ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு மேலதிகமாக மாதாந்தம் இந்த 5000 ரூபா நிவாரண உதவியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
இந்த நிவாரண உதவித் திட்டமானது, ஜனவரி மாதம் முதல் அமுலுக்குவரும் என பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
