எரிவாயு கொள்கலன்களை நிரப்பும் போதும், அதனை விநியோகிக்கும் போதும், பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பரிந்துரைகள் இலங்கை தரநிர்ணய நிறுவகம் மற்றும் நுகர்வோர் அதிகார சபையினால் கடந்த நாட்களில் முன்வைக்கப்பட்டன.
டொலர் பற்றாக்குறை காரணமாகவே தங்களது நிறுவனத்தால் சந்தைக்கு போதியளவு சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தினால் டொலர் வழங்கப்படுமாயின் 24 மணித்தியாலங்களில் எரிவாயுவை விநியோகிக்க முடியும் எனவும் திட்டமிட்ட வகையில் தங்களது எரிவாயு கொள்கலன்களில் நீல நிற வர்ணம் பூசப்படுவதாகவும் லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச். வேகப்பிட்டிய குறிப்பிட்டார்.
லிட்ரோ நிறுவனத்தின் ஊடாகவா இந்த செயற்பாடு இடம்பெறுகின்றது? என்று கேள்வி எழுப்பிய போது, இதற்கு பதிலளித்த டப்ளியூ.கே.எச். வேகப்பிட்டிய, குறித்த நிறுவனத்திற்கு இந்த விடயம் தெரிந்திருக்க வேண்டும் எனவும், நீல நிற எரிவாயு கொள்களன் லிட்ரோ நிறுவனத்திற்கு சொந்தமானதெனவும் குறிப்பிட்டார்.இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தெரியாமல் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அது தொடர்பில் அவர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.இதற்கு எதிராக எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தை நாடி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் கடந்த நாட்களில் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்க முடிய நிலை காணப்பட்ட போது, அவர்களுக்கு நாங்கள் மெர்கப்டன் உள்ளிட்டவற்றை வழங்கி உதவியிருந்தோம் என்பதையும் குறிப்பிட்டார்.