விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் செறிமானத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென அமைச்சின் செயலாளர் கே. டி.ஆர் ஒல்கா கூறியுள்ளார்.
இதன்காரணமாக மண்ணெண்ணெய்க்கு பதிலாக விமானத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயைப் பயன்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக மண்ணெண்ணெய்க்கு பதிலாக விமானத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயைப் பயன்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவை ஏற்படின் எதிர்காலத்தில், ஜெட் ஒயில் எனப்படும், விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்யை மண்ணெண்ணெய்யாக சந்தைகளுக்கு விநியோகிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மண்ணெணெய்க்கு பதிலாக விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவைக்கு மேலதிகமான எண்ணெய் தற்போது கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் மேலும் எண்ணெய் தாங்கிய கப்பல் நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே. டி.ஆர் ஒல்கா கூறியுள்ளார்.