வாகன விபத்துக்களில் நாட்டில் நேற்று இடம்பெற்ற 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பதுளை, அக்கறைப்பற்று, கொழும்பு – கறுவாத்தோட்டம், நிவித்திகல, பண்டாரகம, வரக்காபொல, கல்கமுவ, ஓபாத, வெலிமட, ஹங்வெல்ல, மாலபே ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகத்துறை பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை புத்தாண்டு தினத்தில் மாத்திரம் வாகன விபத்துக்கள் காரணமாக 18 பேர் உயிரிழந்தனர்.கடந்த வருடத்தைக் காட்டிலும், இந்த வருடத்தில் வாகனவிபத்துக்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.