Date:

ஒமிக்ரொன் தொற்று நாட்டில் விரைவாக பரவலடைகிறது – சுகாதார பிரிவு எச்சரிக்கை

நாட்டில் ஒமிக்ரொன் தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு கடுமையாக எச்சரித்துள்ளது.

தற்போது வரையில் நாட்டில் 48 ஒமிக்ரொன் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் சேவைக்கான மருத்துர்கள் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளாா்.

எதிர்வரும் காலங்களில் அடையாளம் காணப்படும் புதிய ஒமிக்ரொன் நோயாளர்களை வீடுகளிலேயே வைத்து சிகிச்சையளிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த இரு வாரங்களில் ஒமிக்ரொன் திரிபு பரவலடையும் வீதத்தில் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இதுவரையில் 48 ஒமிக்ரொன் நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனா்.

இவர்கள் பிரதானமாக கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவில் அடையாளங்காணப்பட்டுள்ளனா்.
அநராதபுரம் மாவட்டத்திலும் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனா். ஒமிக்ரொன் தொற்றிலுள்ள எச்சரிக்கை தன்மையை புரிந்துகொள்ள வேண்டும். சுகாதார ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். தொற்று நிலைமை தீவிரமடைவதற்கு வாயப்பளிக்கப்படக் கூடாது.

வீடுகளிலேயே வைத்து சிகிச்சையளிக்கும் முறைக்காக கடந்த 7ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 72 போ் பதிவாகியிருந்தனா்.இதுவரையில் சிகிச்சை நடவடிக்கைகளை நிறைவடைந்து ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 168 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இதேவேளை நோய் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளர்கள் சமூகத்தில் இருக்க கூடும் என்பதால் சகலரும் சகல பொது இடங்களிலும் சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண்கள் கைது

தெஹிவளையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது பெண்கள் கைது...

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றிய லொறி

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையில் இருந்து பயணித்த லொறி ஒன்று, தடுப்பு...

வௌிநாட்டு பெண்ணொருவர் கடலில் மூழ்கி பலி

மொரகல்ல கடற்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த தாய்லாந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி...

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின், பாலிகேசிரி மாகாணத்தில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1...