கம்பஹா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மரக்கறிகளின் விலைகள் இந்நாட்களில் மிகவும் அதிகமாக காணப்படுவதுடன்,இன்று (02) ஒரு கிலோ பச்சை மிளகாய் 1000 ரூபாவிலிருந்து 1500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
காய்கறிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு விலை உயர்ந்துள்ளதாகவும், இருந்தபோதிலும் தமக்கு ஏற்றவாறு தன்னிச்சையாக மரக்கறிகளுக்கான விலைகயை வியாபாரிகள் நிர்ணயிக்க முயற்சிப்பதாகவும் நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சில விற்பனையாளர்கள் மரக்கறிகளை விலைக் காட்சிப்படுத்தாமல் விற்பனை செய்யும் சூழலில், அதனூடாக வியாபாரிகள் தமக்கு ஏற்றவாறு பல்வேறு மட்டங்களில் விலையை நிர்ணயிக்க முடியும் என நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனா்.