எதிர்காலத்தை புத்துணர்ச்சியுடனும்நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கிறேன். 2022 புது வருடத்தை பெரும் எதிர்பார்ப்புகளுடனும் ஆர்வத்துடனும் வரவேற்போம்.
கொவிட்-19 தொற்று காரணமாக முடங்கியுள்ள பொருளாதாரம்,அன்றாட வாழ்க்கை போன்ற சவால்களை வெற்றிகொண்டு நாட்டை கட்டியெழுப்பவும் பல புதிய சீர்திருத்தங்கள் உருவாக்கவும் மலர்ந்துள்ள புது வருடம் வாய்ப்பளிக்கும் என்று நம்புகின்றேன்.
மேலும் மலர்ந்துள்ள புத்தாண்டை, மக்களுக்கான ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தை அடைந்துகொள்வதற்காக அர்ப்பணித்து, மாற்றத்துடன் கூடிய புத்தாண்டாக மாற்ற அணிதிரளுமாறு அழைப்பு விடுப்பதாகவும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.