அமைச்சர் உதய கம்மன்பில இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தில் உள்ள 61 தாங்கிகளை லங்கா ஐஓசி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 51 வீத பங்குகளை கொண்ட புதிய நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்த தாங்கிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.