புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையினால் சிகரெட் விலையை அதிகரிப்பதற்கான சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வரி சூத்திரம் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளாதாகவும் நாட்டில் பொருளாதாரத்திற்குத் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் சிகரெட்டின் பாவனையைக் கட்டுப்படுத்துவதுமே இந்த வரி சூத்திரத்தின் நோக்கமாகும் எனவும் புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.