பெருவில் விமான விபத்து – 13 பேர் பலி

பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

செஸ்னா கரவன் சி-208 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானம், நேற்று (1) நாஸ்கா கோடுகள் தொல்பொருள் தளத்திற்கு மேல் பறந்துகொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானது.

அதில் 11 சுற்றுலாப் பயணிகளும் 2 விமானிகளும் பயணித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த பயணிகளில் ஜெர்மனியைச் சேர்ந்த இருவர், ஸ்பெயினைச் சேர்ந்த இருவர் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஏழு சுற்றுலாப் பயணிகள் அடங்குகின்றனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

தெற்கு பெருவில் அமைந்துள்ள நாஸ்கா கோடுகள் என்பது பாலைவன மணலில் வரையப்பட்ட பழங்கால விலங்கு உருவங்களைக் கொண்ட, யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளமாகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

 

இந்த வரைபடங்களின் முழுமையான அமைப்பைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் சிறிய ரக விமானங்களில் பயணம் செய்வது வழக்கம்.

விபத்தின் தீவிரத் தன்மை காரணமாக எவரும் உயிர் தப்பவில்லை எனவும் இதுவரை நான்கு சடலங்களை மீட்டுள்ளதாகவும் பெரு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

குவைத் மீது ஈரான் தாக்குதல்; முக்கிய அரச கட்டமைப்புகள் சேதம்

குவைத் மீதான ஈரானின் தாக்குதல்களில் அந்த நாட்டின் முக்கிய அரச கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க படைகளின் தாக்குதல் மீண்டும் தொடர்ந்துள்ளதால், குவைத்...

ஸ்பெயினுக்குள் கடல் வழியாக நுழைய முயன்ற 34 பேர் பலி

மொராக்கோவில் இருந்து ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைய முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு நிகழ்வு, நெரிசல், கடலில் மூழ்கியமை முதலான காரணங்களால் 34...