இன்று கொழும்பில் மரக்கறிகளின் விலை தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கருத்து தெரிவிக்கையில், இடைத்தரகர்களே அதிக இலாபத்தை பெற்றுக் கொள்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
கரட் ஒரு கிலோகிராமின் விலையை 150,250,300 ரூபா என வெவ்வேறு நிலையங்களில் விற்பனை செய்கிறார்கள். இவ்வாறு கிடைக்கும் இலாபம் அரசாங்கத்திற்கு கிடைக்காது எனவும் இது தொடர்பில் ஒரு கட்டுப்பாடு வரவேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.